உள்நாடு

நான்கு நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடிப்பவர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்.

சிறுவர்கள் மத்தியில் இன்புளுவன்சா நோய் அறிகுறிகள் மற்றும் வைரஸ் காய்ச்சல் தொற்று அதிகரித்துள்ளமையினால் குழந்தைகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்துமாறு கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா அறிவுறுத்தியுள்ளார்.

03 அல்லது 04 நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்தால் உடனடியாக இரத்த பரிசோதனை செய்து கொள்வது நல்லது என்றும் வைத்தியர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சுவாசிப்பதில் சிரமம் மற்றும் வாந்தி தொடர்ந்தால், வைரஸ் தடுப்பு மருந்துகள் வழங்கப்படும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்த வைரஸ் நோய்களின் அறிகுறிகளாக தலைவலி, இருமல், சளி, தும்மல், உடல்வலி ஆகியவற்றுடன் கூடிய காய்ச்சல் இருக்கும் என்றும் வைத்தியர் தெரிவித்துள்ளார்.

இத்தகைய அறிகுறிகள் தென்பட்டால் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும், அறிகுறி உள்ள குழந்தைகளை வீட்டிலேயே தங்க வைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், குழந்தைகளுக்கு இயற்கையான திரவ உணவு மற்றும் சரியான அளவு பாரசிட்டமால் மாத்திரைகளை வழங்குமாறும் வைத்தியர் கேட்டுக்கொண்டுள்ளார்.

02 வயதுக்குட்பட்ட குழந்தைகள், 65 வயதுக்கு மேற்பட்ட பெரியவர்கள், நாற்பட்ட சுவாச நோய்கள் உள்ளவர்கள், நோயெதிர்ப்பு குறைபாடுள்ளவர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு இந்த வைரஸ் தீவிரமாக பரவும் தன்மை கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

எனவே 03 அல்லது 04 நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்தால் உடனbahடிக இரத்த பரிசோதனை செய்து கொள்வது நல்லது என வைத்தியர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *