பொருட்களின் விலையை குறைத்தது சதொச!
சில அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை குறைப்பதற்கு லங்கா சதொச நிறுவனம் தீர்மானித்துள்ளது.
அதன்படி,
- ஒரு கிலோ உருளைக்கிழங்கு 35 ரூபாயால் குறைப்பு – புதிய விலை 240 ரூபாய்,
- ஒரு கிலோ வெள்ளை கெளபி 22 ரூபாயால் குறைப்பு – புதிய விலை 998 ரூபாய்,
- ஒரு கிலோ இந்திய பெரிய வெங்காயம் 20 ரூபாயால் குறைப்பு – புதிய விலை 265 ரூபாய்,
- ஒரு கிலோ வெள்ளை சீனி 4 ரூபாயால் குறைப்பு – புதிய விலை 254 ரூபாய்,
- ஒரு கிலோ கீரி சம்பா 6 ரூபாயால் குறைப்பு – புதிய விலை 254 ரூபாய்,
- ஒரு கிலோ சிவப்பு சீனி 5 ரூபாயால் குறைப்பு – புதிய விலை 370 ரூபாய்,
- ஒரு கிலோ பருப்பு 5 ரூபாயால் குறைப்பு – புதிய விலை 285 ரூபாய்,
- ஒரு கிலோ சிவப்பு கெளபி 10 ரூபாயால் குறைப்பு – புதிய விலை 940 ரூபாய்
இந்நிலையில் குறித்த விலை மாற்றங்கள் இன்று (02) முதல் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து லங்கா சதொச விற்பனை நிலையங்களிலும் அமுலுக்கு வருமென தெரிவித்துள்ளது.