கழிவறையில் குழந்தை பெற்றெடுத்த 16 வயது பாடசாலை மாணவி!
ஆந்திர மாநிலம் கோதப்பட்டினத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் 16 வயது சிறுமிக்கு பிறந்த குழந்தை உயிரிழந்ததுள்ளது.
மேலும் யாருக்கும் தெரியப்படுத்தாமல் பல மணிநேரம் பிரசவ வலியால் துடித்த மாணவி தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஜூன் மாதம் பாடசாலை சேர்ந்த மாணவி, தொடர்ந்து வகுப்புகளுக்கு சென்று வந்துள்ளனார். இந்த நிலையில் கடந்த புதன்கிழமை அன்று பல மணி நேரமாக பிரசவ வலியால் அவதிப்பட்ட மாணவி, வகுப்பில் இருந்து கழிவறைக்குச் சென்று குழந்தை பெற்றுள்ளார். அவர் தனது உடல்நிலை குறித்து யாருக்கும் தெரிவிக்கவில்லை.
மாணவி நீண்ட நேரம் வகுப்புக்குத் திரும்பாததால், அவளது தோழிகளும், ஆசிரியர்களும் கழிவறைக்குச் சென்று பார்த்துள்ளனர். அப்போது தான் கழிவறையில் மாணவி ஆபத்தான நிலையில் இருப்பதைக் கண்டு உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். தற்போது மாணவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதையடுத்து சம்பவம் குறித்து பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.