முட்டை இறக்குமதிக்கு எதிர்ப்பு!
விவசாய உற்பத்திப் பொருட்களின் விலையை ஒழுங்குபடுத்துவதற்கான முறைமையை அரசாங்கம் தயாரிக்கத் தவறியதன் காரணமாகவே முட்டைகளை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அவ்வாறானதொரு முறையை தயார் செய்யாமல் முட்டைகளை இறக்குமதி செய்வதன் ஊடாக உள்நாட்டு தொழில் அழிவை சந்திக்கும் என சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்தார்.
எனினும், வரும் பண்டிகைக் காலத்துக்கு முட்டை, கோழி இறைச்சிகள் தட்டுப்பாடின்றி வழங்க வாய்ப்பு உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.