மத்திய கிழக்கில் உச்சக்கட்ட பதற்றம்!
லெபனானில் இயங்கி வரும் ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா அமைப்பு வடக்கு இஸ்ரேலை குறிவைத்து ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
அண்மையில் இஸ்ரேலிய தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் ஒருவர் உயிரிழந்ததன் அடிப்படையில், இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்கப்போவதாக ஹிஸ்புல்லா அமைப்புக்கள் எச்சரிக்கை விடுத்திருந்தன.
இஸ்ரேல் தனது “அயர்ன் டோம் வான் பாதுகாப்பு அமைப்பை” பயன்படுத்தி ஏவுகணை தாக்குதல்களை இடைமறித்ததாகக் கூறுகிறது.
ஹிஸ்புல்லாஹ் தாக்குதல்களினால் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
எனினும், மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரிக்கும் அபாயம் உள்ளதால், அமெரிக்கா, பிரிட்டன், ஜோர்தான், கனடா உள்ளிட்ட நாடுகள் லெபனானில் உள்ள தங்கள் குடிமக்களை உடனடியாக அந்நாட்டை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தியுள்ளன.