ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சஜித்திற்கு ஆதரவு.
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவை நிபந்தனைகளுடன் வழங்க அக்கட்சி இன்று (04) தீர்மானித்துள்ளது.
கொழும்பு கொம்பனித்தெருவில் அமைந்துள்ள முஸ்லிம் காங்கிரஸின் பிரதான காரியாலயத்தில் கட்சியின் அதியுயர் பேரவை இன்று கூடியது.
இந்த கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், “சஜித் பிரேமதாசவுக்கு நிபந்தனைகளுடன் ஆதரவளிக்க முஸ்லிம் காங்கிரஸின் அதியுயர் பேரவை தீர்மானித்துள்ளது” என்றார்.