நாமல் ராஜபக்ஷ இராஜினாமா.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சர்வதேச உறவுகள் தொடர்பான துறைசார் கண்காணிப்புக் குழுவில் இருந்து இராஜினாமா செய்துள்ளார்.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இது தொடர்பில் இன்று பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
வெற்றிடமாக உள்ள குழு பதவிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் சி.தொலவத்த நியமிக்கப்பட்டுள்ளார்.
அந்த குழுவின் தலைவராக நாமல் ராஜபக்ச செயற்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.