நிலையான வைப்பு வட்டி வீதம் அதிகரிப்பு
சிரேஷ்ட பிரஜைகளான 60 வயதுக்கு மேற்பட்டவர்களின் வட்டி வீதத்தை 10% ஆக உயர்த்த அமைச்சரவை அனுமதி அளித்துள்ளதாக ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
பல சிரேஷ்ட பிரஜைகளின் முக்கிய வருமானமாக இருப்பது நிலையானவைப்பு வட்டியே ஆகும் என்பதால் நாட்டிலுள்ள சிரேஷ்ட பிரஜைகளின் வங்கி வைப்புத்தொகைக்கான வட்டி வீதத்தை திருத்துவதற்கான தீர்வு யோசனை அடங்கிய அறிக்கையை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய நேற்றைய தினம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், சிரேஷ்ட பிரஜைகளின் நிலையான வைப்புத்தொகைக்கான வட்டி வீதத்தை 8.5% வட்டி வீதத்தில் இருந்து 10% வட்டி வீதமாக உயர்த்த அமைச்சரவை அனுமதி அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.