பரிஸ் ஒலிம்பிக்: அரையிறுதிப் போட்டியில் பங்கேற்கும் அருண தர்ஷன.
பரிஸ் ஒலிம்பிக்கில் இலங்கையின் அருண தர்ஷன பங்கேற்கும் 400 மீற்றர் அரையிறுதிப் போட்டி இலங்கை நேரப்படி இன்று (06) இரவு 11.05 அளவில் நடைபெறவுள்ளது.
ஆடவருக்கான 400 மீற்றர் ஓட்டத்தில் முதல் சுற்றுப் போட்டியில் அருண தர்ஷன மூன்றாமிடத்தைப் பிடித்தார்.
போட்டியைப் பூர்த்திசெய்ய அவருக்கு 44.99 செக்கன்கள் சென்றதுடன் இதன் மூலம் அரையிறுதி சுற்றுக்கு தகுதிபெற்றமையும் குறிப்பிடத்தக்கது.
ஒலிம்பிக்கில் ஆடவருக்கான 400 மீற்றர் ஓட்டத்தில் அரையிறுதி சுற்றுக்கு தகுதிபெற்ற முதல் இலங்கையர் எனும் மைல்கல் சாதனையை அவர் நிகழ்த்தியிருந்தார்.