ரயில் போக்குவரத்து பாதிப்பு!
தெமட்டகொட ரயில் நிலைய ஊழியர்கள் தமது கடமைகளை புறக்கணித்துள்ளதால் ரயில் போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக கொழும்பு கோட்டையிலிருந்து புறப்படும் ரயில் சேவைகளில் தாமதங்கள் மற்றும் ரயில்கள் இரத்துச் செய்யப்படக்கூடும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
தெமட்டகொட ரேஸ்வே ஊழியர் ஒருவர் காணாமற் போனமை தொடர்பிலான விசாரணைகள் உரிய முறையில் மேற்கொள்ளப்படவில்லை என எதிர்ப்புத் தெரிவித்து ஊழியர்கள் தற்போது தமது பணிகளில் இருந்து விலகியுள்ளனர்.
இதன் காரணமாக காலை கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை வரை இயக்கப்படவிருந்த பொடி மெனிகே ரயில் மற்றும் பதுளை ஒடிசி ஆகிய ரயில்களை இதுவரையில் இயக்க முடியவில்லை என ரயில் போக்குவரத்து பிரதி பொது முகாமையாளர் என்.ஜே.இந்திபொலகே தெரிவித்தார்.
தற்போதைய நிலைமை காரணமாக பல ரயில் பயணங்களை இரத்து செய்ய வேண்டியுள்ளதாகவும் இந்திபொலகே குறிப்பிட்டுள்ளார்.