லக்ஷ்மன் கிரியெல்ல ஊடகவியலாளர்களை இழிநிலைக்கு தள்ளியுள்ளார்.
பிராந்திய ஊடகவியலாளர்களுக்கு பரிசு வவுச்சர்களை வழங்கி கூட்டத்துக்கு அழைத்து வந்துள்ளனர்
என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல பாராளுமன்றத்தில் கூறியதன் மூலம் ஊடகவியலாளர்களை மிகவும் கீழ் மட்ட இழிநிலைக்கு தள்ளியுள்ளார் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் கொழும்பில் ஊடகவியலாளர்களின் பிரச்சினைகளை ஜனாதிபதி அவர்களுடன் கலந்தாலோசிக்க சந்திப்பொன்று அமைச்சர் மனுஷ நாணயக்கார அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டது.
இக்கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் ஜய்யாயிரம் ரூபாய் பெறுமதியான பரிசு வவுச்சர்கள் பகிர்ந்து அளிக்கப்பட்டதாக இன்று பாராளுமன்றத்தில் கூறப்பட்டுள்ளது என் அமைச்சர் தெரிவித்தார்