கம்பஹா மாவட்டத்தில் 12 மணி நேர நீர் வெட்டு!
மின்சார சபையின் அத்தியாவசிய பராமரிப்பு பணிகளை முன்னிட்டு பியகம நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கான நீர்விநியோகம் தடைப்படுவதனால் 11ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மு.ப 9.00 தொடக்கம் இரவு 9.00 மணி வரையிலான 12 மணி நேர நீர் வெட்டு பின்வரும் பகுதிகளில் அமுலாகும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பை சபை அறிவித்துள்ளது
அதன்படி பேலியகொட, வத்தளை, ஜா-எல, கட்டுநாயக்க, சீதுவ நகரசபைகள் மற்றும் களனி, பியகம, மஹர, தொம்பே, கந்தான, மினுவங்கொடை பிரதேச சபை பகுதிகள் மற்றும் கம்பஹா பிரதேச சபை நிர்வாக எல்லையின் சில பகுதிகளுக்கு நீர் வெட்டு அமுலாக்கப்படும்.
இதனால் பாவனையாளர்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை கவலை தெரிவிப்பதோடு, நீரை முன்கூட்டியே சேமித்து வைத்து சிக்கனமாக பயன்படுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
இது பற்றிய மேலதிக விபரங்களுக்கு 1939 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொள்ளும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.