உயர்நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு – ஹரீன் – மனுஷ பதவிகளை இழப்பர்
அமைச்சர்களான ஹரீன் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோரை கட்சியில் இருந்து நீக்குவதற்கான ஐக்கிய மக்கள் சக்தி மேற்கொண்ட தீர்மானம் சட்டரீதியாக செல்லுபடியாகும் என உயர் நீதிமன்றம் இன்று தீர்மானித்துள்ளது.
இந்த தீர்ப்பின் விளைவாக, ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோரின் வெளியேற்றம் அவர்களின் பாராளுமன்ற ஆசனங்களையும் அமைச்சுப் பதவிகளையும் இழக்க வழிவகுக்கும்.