8 நாட்களில் 53,000 சுற்றுலா பயணிகள் வருகை
நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை ஆகஸ்ட் மாத்தத்தில் அதிகரித்துள்ளது.
அதன்படி, ஆகஸ்ட் மாதத்தில் முதலாம் திகதி முதல் 8 ஆம் திகதி வரை எட்டு நாட்களில் 53,150 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர். இந்நிலையில், நாட்டிற்கு இதுவரை 1,252,209 சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர்.
ஏப்ரல் மாதத்தில் 35,000 பேரும், மே மாதத்தில் 26,000 பேரும், ஜூன் மாதத்தில் 27,000 பேரும், ஜூலை மாதத்தில் 43,000 பேரும் வாராந்திரம் வருகை தந்துள்ள போக்கு வளர்ச்சியடைந்துள்ளது.
ஆகஸ்ட் மாதத்தில் வாராந்திர சராசரி வருகை சராசரியாக 46,000 ஆகவும், நாளாந்த வருகை சராசரியாக 6,600 ஆகவும் உள்ளது.
ஆகஸ்ட் மாதத்தில் கோடை காலம் காரணமாக சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. எவ்வாறாயினும், சுற்றுலா மற்றும் வருகை தரு விசா வழங்குவதில் உள்ள சிக்கல்கள் காரணமாக, எதிர்வரும் வாரங்கள் மற்றும் மாதங்களுக்கு இந்த வேகத்தைத் தக்கவைக்க முடியுமா என்பது கேள்விக்குறியாகவுள்ளது.