வடக்கு வானில் விண்கல் மழை!
இன்று (11) நள்ளிரவுக்குப் பின்னர் வடக்கு வானில் வெற்றுக் கண்ணுக்குத் தெரியும் விண்கல் மழை தோன்றும் என வானியலாளர் கிஹான் வீரசேகர தெரிவித்துள்ளார்.
பெர்சியஸ் விண்மீன் கூட்டத்திற்கு அருகில் விண்கல் மழை தோன்றுவதால், இந்த விண்கல் மழை பெர்சியஸ் என்று அழைக்கப்படுகிறது.
ஜூலை மாதம் நடுப்பகுதியிலிருந்து ஓகஸ்ட் மாதம் நடுப்பகுதி வரை இந்த விண்கல் மழை காணப்படுவதுடன், இன்று (11) நள்ளிரவுக்குப் பின்னர் அதன் உச்சம் ஏற்படும்.
ஒரு மணித்தியாலத்தில் சுமார் நூறு விண்கற்களை காண முடியும் எனவும், சமவெளிக்கு சென்று தடையின்றி பார்வையிட முடியும் எனவும் வானியலாளர் கிஹான் வீரசேகர தெரிவித்துள்ளார்.