பிரித்தானியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள துப்பாக்கி சூடு.
பிரித்தானியாவின் சர்ரே(Surrey) கிராமத்தில் தீவிர வாக்குவாதம் தொடர்பான தகவல்களுக்கு பிறகு, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் இளைஞர் ஒருவரை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதன்போது துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்கான 20 வயதுடைய அந்த இளைஞர் தீவிரமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் நாஃபில்(Knaphill) நர்சரி வீதியில் நள்ளிரவுக்கு பிறகு ஆயுதம் ஏந்திய நபர் உட்பட இருவருக்கு இடையிலான வாக்குவாதம் குறித்த தகவலை தொடர்ந்து சர்ரே பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.இந்நிலையில் நாஃபில்(Knaphill) நர்சரி வீதியில் நள்ளிரவுக்கு பிறகு ஆயுதம் ஏந்திய நபர் உட்பட இருவருக்கு இடையிலான வாக்குவாதம் குறித்த தகவலை தொடர்ந்து சர்ரே பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
இருவரில் ஒருவர் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டுக்கு உள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
துப்பாக்கி சூடு நடத்திய அதிகாரியிடம் இருந்து ஆயுதம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன் அவர் பொலிஸ் நடத்தையை கண்காணிக்கும் சுயாதீன அலுவலகத்திற்கு கட்டாய பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.