ரக்பி போட்டியின் கடைசி நிமிடத்தில் வெற்றி பெற்ற இசிபதன கல்லுாரி.
பாடசாலைகளுக்கு இடையிலான ரக்பி போட்டியின் முதலாவது பிரிவு ரக்பி போட்டியின் சுப்பர் 4 சுற்றில் (10ஆம் திகதி) இடம்பெற்ற போட்டியில் கொழும்பு றோயல் கல்லூரிக்கு எதிராக கொழும்பு இசிபதன கல்லூரி 19-18 புள்ளிகள் என்ற அடிப்படையில் வெற்றியை பதிவு செய்தது.
இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் மேலும் ஒரு வருடத்திற்கு ‘மேஜர் மில்ரோய் பெர்னாண்டோ’ கிண்ணத்தை தக்கவைத்துக் கொள்ளும் வாய்ப்பு இசிபதன அணிக்கு கிடைத்துள்ளது.
கொழும்பு ஹெவ்லொக் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியின் முதல் பாதியின் முடிவில் 3-0 என முன்னிலை வகித்த இசிபதன அணி இரண்டாவது பாதியில் மேலும் 16 புள்ளிகளைப் பெற்றது. இரண்டாவது பாதியில் றோயல் கல்லூரியால் 18 புள்ளிகளைப் பெற முடிந்த போதிலும், முதல் பாதி முடிவில் புள்ளி வித்தியாசத்தின் படி இசிபதன அணி ஒரு புள்ளியால் வெற்றி பெற்றது