தாய்லாந்து பிரதமர் பதவியில் இருந்து நீக்கம்!
தாய்லாந்து பிரதமர் ஸ்ரெத்தா தவிசினைப் (Srettha Thavisin) பதவி நீக்கம் செய்யுமாறு தாய்லாந்தின் அரசமைப்புச் சட்ட நீதிமன்றம், உத்தரவிட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
குற்றவியல் தண்டனை வழங்கப்பட்ட முன்னாள் வழக்கறிஞர் ஒருவருக்கு அமைச்சர் பதவியை வழங்கியதன் காரணமாக அவ்வாறு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
நடத்தை அடிப்படையில் சரியாக நடந்துகொள்ளாத ஒருவரை அமைச்சராக நியமித்து அரசமைப்புச் சட்டத்தை மீறியதாக நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.