அரச ஊழியரின் சம்பள அதிகரிப்பு அரசியல் நோக்கம் எதுவும் இல்லை – இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவிப்பு.
அரசாங்க ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு பிரேரணையில் எவ்வித அரசியல் நோக்கமும் இல்லை என்றும், மக்களுக்கு அதிகபட்ச நிவாரணங்களை வழங்க அரசாங்கம் முடிந்தவரை செயற்படுவதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
அங்கு மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர்:
முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர். செனவிரத்ன தலைமையிலான நிபுணர் குழு வழங்கிய பரிந்துரைகள் மற்றும் தீர்மானங்களின் பிரகாரம் இந்த முன்மொழிவை அமைச்சரவை அங்கீகரித்தது. தற்போதுள்ள வாழ்க்கை நிலைமைகள், பொருளாதார நிலை என்வற்றைக் கவனத்தில் கொண்டு இந்த அறிக்கையை இக்குழு தயாரித்துள்ளது. வரிகளை குறைத்து சம்பளத்தை அதிகரிக்க போவதாக எதிர்க்கட்சிகள் கூறுபவற்றை ஆராய வேண்டும் என்றார்.