கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புதிய சொகுசு பஸ் சேவை – 3,000 ரூபாய் கட்டணம்.
கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து கொழும்பு – கோட்டை பிரதான புகையிரத நிலையம் மற்றும் மகும்புர பல்வகை போக்குவரத்து நிலையம் வரை புதிய சொகுசு பஸ் சேவை இன்று (15) ஆரம்பிக்கப்பட்டது.
கட்டுநாயக்க விமான நிலையம், விமான நிறுவனம், போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு மற்றும் தனியார் பஸ் நிறுவனம் இணைந்து இந்த பஸ் சேவையை ஆரம்பித்துள்ளது.
சுற்றுலாப் பயணிகள் மற்றும் விமானப் பயணிகளின் வசதிக்காக இந்தப் பேருந்து சேவை அம்பிக்கப்பட்டுள்ளதுடன், இதற்காக 10 சொகுசு பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஒரு பயணிக்கு ஒரு பயணத்திற்கு 3,000 ரூபாய் கட்டணம் அறவிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.