தேர்தல் தொடர்பில் 408 முறைப்பாடுகள்
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இதுவரை 408 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.
ஜனாதிபதி தேர்தல் குறித்து அறிவிக்கப்பட்ட தினம் முதல் இதுவரையான காலப்பகுதிக்குள் பதிவானவற்றில் வன்முறை சம்பவமொன்றும் தேர்தல் சட்டத்தை மீறிய 392 முறைப்பாடுகளும் அடங்குகின்றன.
எவ்வாறாயினும் இம்முறை ஜனாதிபதி தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டதிலிருந்து வேட்புமனு தாக்கல் செய்யும் நாள் வரையிலான காலப்பகுதிக்குள் பதிவாகும் தேர்தல் வன்முறைகளின் எண்ணிக்கையானது கடந்த ஜனாதிபதி தேர்தலுடன் ஒப்பிடுகையில் குறைந்த அளவிலேயே காணப்படுவதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் தெரிவித்துள்ளன.