இறக்குமதி செய்யப்படும் வெள்ளை சர்க்கரையில் மோசடி.
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வெள்ளை சர்க்கரையுடன் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் சிவப்பு சர்க்கரையை கலந்து மோசடி செய்துவருவதை நுகர்வோர் விவகார ஆணையத்தின் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
எம்பிலிப்பிட்டியவில் நடத்தப்பட்ட சோதனையில், வர்த்தகர் ஒருவர் நீண்டகாலமாக இவ்வாறு மோசடி செய்து வருவது தெரியவந்துள்ளது.
இந்த மோசடி சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாக நுகர்வோர் விவகார ஆணையத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.