ஊக்கமருந்து பயன்படுத்திய இலங்கை கிரிக்கெட் வீரர் இடைநீக்கம்!
ஊக்கமருந்து பயன்படுத்திய குற்றத்திற்காக இலங்கை கிரிக்கெட் வீரர் நிரோஷன் டிக்வெல்லா இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
சமீபத்தில் முடிவடைந்த லங்கா பிரீமியர் லீக் (LPL) போட்டியின் போது ஊக்கமருந்து பாவித்தமை தொடர்பான குற்றச்சாட்டில் இலங்கை கிரிக்கெட் வீரர் நிரோஷன் டிக்வெல்லா அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அவரது தண்டனை காலம் எவ்வளவு என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.