தாய்லாந்து பிரதமராக பேட்டோங்டர்ன் ஷினவத்ரா தேர்வு.
தாய்லாந்தின் புதிய பிரதமராக பேடோங்டார்ன் ஷினவத்ராவை (Paetongtarn Shinawatra) அந்நாட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர்.
37 வயது பேடோங்டார்ன், முன்னாள் தாய்லாந்துப் பிரதமர் தக்சின் ஷினவத்ராவின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்பு அக்கட்சியைச் சேர்ந்த ஸ்ரெத்தா தவிசின் தாய்லாந்தின் பிரதமராகப் பதவி வகித்தார்.
சில நாட்களுக்கு முன்னர் நெறிமுறை மீறல் தொடர்பாக அரசியலமைப்பு நீதிமன்றத்தின் உத்தரவின் மூலம் முன்னாள் பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் பதவியில் இருந்து நீக்கப்பட்டதை அடுத்து இந்த வாக்கெடுப்பு இடம்பெற்றுள்ளது.
இதை அடுத்து பேடோங்டார்ன் ஷினவத்ரா தாய்லாந்து அடுத்த பிரதமராகப் பதவி ஏற்க இருக்கிறார்.