மனித பாவனைக்குத் தகுதியற்ற ஆயிரம் கிலோ பருப்பு கண்டுபிடிப்பு!
புறக்கோட்டை, ஐந்து லாம்பு சந்தி தெருவில் அமைந்துள்ள களஞ்சியசாலை ஒன்றில் இருந்து மனித பாவனைக்குத் தகுதியற்ற 1,000 கிலோ கிராம் பருப்பு கையிருப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு கிடைத்த தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது பிரபல உணவு இறக்குமதி நிறுவனமொன்றுக்கு சொந்தமான களஞ்சியசாலையில் இருந்து குறித்த பருப்பு கையிருப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சோதனையின் போது, பருப்பு கையிருப்பில் இருந்து பூஞ்சை அகற்றப்பட்டு, மீண்டும் பதப்படுத்தப்பட்டு, சந்தைக்கு அனுப்புவதற்காக பொதி செய்யப்பட்டுக் கொண்டிருந்தாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
குறித்த பருப்பு இருப்புக்களை நுகர்வோர் அதிகாரசபை கைப்பற்றியுள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் விசாரணை செய்து வழங்கு தாக்கல் செய்யவுள்ளது.