மலையக ரயில் சேவையில் தாமதம்!
மலையக ரயில் மார்க்கத்தில் பதுளை மற்றும் கொழும்பு கோட்டைக்கு இடையில் ரயில் சேவை தடைப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி புகையிரத கட்டுப்பாட்டு அலுவலகம் தெரிவித்துள்ளது.
பதுளையிலிருந்து கண்டி நோக்கி பயணித்த ரயில் இன்று(16) பிற்பகல் தெமோதர ரயில் நிலையத்திற்கு அருகில் தடம் புரண்டமை காரணமாக ரயில் சேவை தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.