ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மௌலானா ரணிலுக்கு ஆதரவு.
ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மௌலானா சற்று நேரத்துக்கு முன்னர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கு தனது ஆதரவை வழங்கியுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஃப்ளாவர் வீதியில் அமைந்துள்ள தேர்தல் காரியாலயத்தில் வைத்து பாராளுமன்ற உறுப்பினர் தனது ஆதரவை ஜனாதிபதிக்கு வழங்கினார்.
1988 ம் ஆண்டு தீவிர அரசியலில் ஈடுபட்டுவந்த அலிசாஹிர் மௌலானா 1994 ஆண்டு முதல் தடவையாக பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது