மூன்று பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
குடா கங்கையின் நீர் மட்டம் அதிகரித்து வருவதால், அடுத்த 48 மணித்தியாலங்களில் புளத்சிங்கள, பாலிந்தநுவர மற்றும் மதுராவளை பிரதேச செயலகப் பிரிவுகளின் தாழ்நிலப் பகுதிகளில் வெள்ள அபாயம் ஏற்படக் கூடும் என நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.