இந்த வருடத்தில் 34,906 டெங்கு நோயாளர்கள் பதிவு!
இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 34,906 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
அதிகளவான நோயாளர்கள் மேல் மாகாணத்தில் 14,248 பேர் பதிவாகியுள்ளனர்.
கொழும்பு மாவட்டத்தில் மட்டும் 8452 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோயினால் 16 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.