ஓய்வூதியம் பெறும் அனைத்து அரச ஊழியர்களுக்கும் இடைக்கால கொடுப்பனவு.
ஓய்வூதியம் பெறும் அனைத்து அரச ஊழியர்களுக்கும் இடைக்கால கொடுப்பனவொன்றை வழங்குவது தொடர்பாக சுற்றறிக்கை வௌியிடப்பட்டுள்ளது.
பொதுநிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சின் செயலாளரினால் இந்த சுற்றறிக்கை வௌியிடப்பட்டுள்ளது.
செப்டம்பர் மாத கொடுப்பனவை ஒக்டோபர் மாத கொடுப்பனவுடன் வழங்கவுள்ளதாக அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணைக்குழு, திறைசேரி மற்றும் ஓய்வூதிய திணைக்களம் ஆகிய பிரிவுகளுக்கு குறித்த சுற்றறிக்கையின் பிரதிகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
ஓய்வூதியம் பெறும் அனைத்து அரச ஊழியர்களுக்கும் 3000 ரூபா இடைக்கால கொடுப்பனவு வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.