இறக்குமதி செய்யப்படும் இஞ்சி – குற்றம் சுமத்தும் விவசாயிகள்!
இஞ்சி இறக்குமதி செய்ய எடுக்கப்பட்ட தீர்மானத்தினால், உள்ளூர் சந்தையில் இஞ்சியின் விலை வேகமாக வீழ்ச்சியடைந்துள்ளதால், கடும் பொருளாதார நெருக்கடிக்குள்ளாகியுள்ளதாக இஞ்சி விவசாயிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
கடந்த காலத்தில் சந்தையில் 3,000 ரூபாவாக உயர்ந்த ஒரு கிலோகிராம் இஞ்சி தற்போது 1,000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது.
எவ்வாறாயினும், விலையை கட்டுப்படுத்தும் வகையில் 3,000 மெற்றிக் தொன் இஞ்சியை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அண்மையில் அனுமதி வழங்கியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.