உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை அடுத்த மாத ஆரம்பத்தில் விநியோகம்.
ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை வாக்காளர்களுக்கு விநியோகிக்கும் நடவடிக்கைகள் அடுத்த மாத ஆரம்பத்தில் ஆரம்பிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.ஏ.எம்.எல். ரத்நாயக்க தெரிவித்தார்.
தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகத்தில் இன்று (20) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட அவர், இவ்வருட உத்தியோகபூர்வ வாக்குச்சீட்டு அண்ணளவாக 27 அங்குல நீளம் கொண்டது என தெரிவித்தார்.