சிலிண்டர் சின்னத்துக்கு சிக்கல் இல்லை.
ஜனாதிபதித் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்கப்பட்ட எரிவாயு சிலிண்டர் தொடர்பான ஆட்சேபனைகளை தேர்தல்கள் ஆணைக்குழு நிராகரிக்க தீர்மானித்துள்ளது.
கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் எரிவாயு சிலிண்டர் சின்னம் தமது அணிக்கு வழங்கப்பட்டதாக அரசியல் கட்சியொன்று முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீத ரத்நாயக்க பதிலளித்துள்ளார்.
உள்ளூராட்சி தேர்தலின் போது காஸ் சிலிண்டர் சின்னத்தை கேட்டு பலர் கோரிக்கை வைத்திருந்தனர்.
ஒதுக்கப்பட்ட சின்னங்கள் அரசியல் கட்சிகளுக்கு மட்டுமேயாகும். மற்றவை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.
எனவே, பொய்யான விஷயங்களுக்கு வாய்ப்பளிக்கக் கூடாது. இவற்றுக்குப் பதில் சொல்வதும் பொய்யானது, ஊடகங்களில் விளம்பரம் பெறுவதற்காக இப்படிச் செய்கிறார்கள் என்றார்.