தபால் மூலம் வாக்களிப்பு – 7 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் தகுதி.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் 7 இலட்சத்திற்கும் அதிக வாக்காளர்கள் தபால் மூலம் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
முப்படையினர், பொலிஸ் அதிகாரிகள் மற்றும் அரச அதிகாரிகளும் அடங்குவதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கடந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலில் தபால் வாக்குகளைக் குறிக்கத் தகுதி பெற்றவர்களின் எண்ணிக்கையை விட இது அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தபால் மூல வாக்களிப்பு செப்டம்பர் 04, 05 மற்றும் 06 ஆம் திகதிகளில் நடைபெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.