இன்று முதல் ரயில் டிக்கெட் டிஜிட்டல் முறையில்.
இன்று (22) முதல் டிஜிட்டல் ரயில் டிக்கெட் ரயில்வே திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ளது.
ரயில்வே திணைக்களத்தின் www.pravesha.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக கொள்வனவு செய்யக்கூடிய இந்தப் புதிய டிக்கெட்டில் QR குறியீடு உள்ளடக்கப்பட்டுள்ளது.
உங்கள் பயண விவரங்களை சம்பந்தப்பட்ட இணையதளத்தில் பதிவு செய்து, அதற்கான டிக்கெட்டுக்கு பணம் செலுத்திய பிறகு, SMS அல்லது மின்னஞ்சல் செய்தி மூலம் உரிய டிக்கெட்டைப் பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.