ஈரான் முன்னாள் ஜனாதிபதி மரணம்- ஹெலி. விபத்துக்கான காரணம் வெளியானது.
மறைந்த ஈரான் முன்னாள் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி பயணம் செய்த ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதற்கான காரணத்தை அந்நாட்டு அரசு செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
ஈரான் ஜனாதிபதி பயணித்த ஹெலிகொப்டர் கடந்த மே மாதம் அஜர்பைஜான் எல்லையில் உள்ள மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கியது.
இவ்விபத்து தொடர்பில் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், ஹெலிகொப்டர் தாக்கப்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணத்தால் ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளனதா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணைகள் நடத்தப்பட்டன.
இந்நிலையில், மோசமான வானிலை மற்றும் ஹெலிகொப்டரின் எடையை கட்டுப்படுத்த முடியாமல் ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானது என செய்தி வெளியிடப்பட்டுள்ளது.