எரிபொருள் மற்றும் உரத்திற்கு மானியம் – இன்று முதல் அமுல்!
மீனவர்களுக்கு டீசல் மற்றும் மண்ணெண்ணெய்க்கு 25 ரூபா மானியம் வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இது தவிர தேயிலை உற்பத்தியாளர்களுக்கு 4,000 ரூபா உர மானியம் வழங்கவும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இந்த சலுகைகள் இன்று (22) முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்படுகின்றது.