EPF குறித்து மத்திய வங்கி வௌியிட்ட அறிவிப்பு!
2023ஆம் ஆண்டின் இரண்டாம் அரையாண்டுக்கான ஊழியர் சேமலாப நிதிய அங்கத்தவர்களின் கணக்குக்கூற்று வெளியிடப்பட்டுள்ளதாகஇலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
ஊழியர் சேமலாப நிதியத்தின் 2023ஆம் ஆண்டிற்கான அங்கத்தவர்களின் கணக்குக்கூற்று சேவை வழங்குநர்களுக்கு தபால் மூலம் தற்போது அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அதன்படி தமக்கு சம்பந்தப்பட்ட அங்கத்தவர்களின் கணக்குக்கூற்றை சேவை வழங்குநரிடம் இருந்து உடனே பெற்றுக்கொள்ளுமாறு இலங்கை மத்திய வங்கி தமது அறிக்கையில் தெரிவித்துள்ளது.