பணவீக்கம் அதிகரிப்பு!
தேசிய நுகர்வோர் விலை சுட்டெண் அடிப்படையிலான முதன்மை பணவீக்கம் கடந்த ஜூலை மாதத்தில் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.
தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, கடந்த ஜூன் மாதத்தில் 2.4 சதவீதமாகக் காணப்பட்ட தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையிலான முதன்மை பணவீக்கம் ஜூலை மாதத்தில் 2.5 சதவீதமாக அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.