MPOX வைரஸுக்கு எதிராக டென்மார்க் இடம் இருந்து தடுப்பூசி.
டென்மார்க்கில் உள்ள மருந்து தயாரிப்பு நிறுவனமான Bavarian Nordic, mpox வைரஸுக்கு தடுப்பூசிகளை வழங்குவதில் கவனம் செலுத்தியுள்ளது.
இதனால் அடுத்த ஆண்டு இறுதிக்குள் 10 மில்லியன் டோஸ் தடுப்பூசி போட தயாராக இருப்பதாக கூறப்படுகிறது.
தற்போது சுமார் 5 லட்சம் தடுப்பூசி டோஸ்கள் கையிருப்பில் இருப்பதாகவும் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
காய்ச்சல், தோல் கொப்புளங்கள் மற்றும் வீங்கிய நிணநீர் கணுக்கள் ஆகியவை mpox இன் முக்கிய அறிகுறிகளாகும்.
இதேவேளை, விமான நிலையத்தினூடாக நாட்டிற்குள் பிரவேசிக்கக் கூடிய mpox தொற்றுக்குள்ளானவர்களைக் கண்டறியும் வகையில், நாடு பூராவும் உள்ளடக்கும் வகையில் பரிசோதனை முறை பலப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
தொற்றா நோயாளர்கள் பதிவாகினால், கொழும்பு தொற்று நோய் நிறுவகத்தில் தனிமைப்படுத்தல் மற்றும் சிகிச்சை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும், கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் mpox நோயாளிகளைக் கண்டறிவதற்கான ஆய்வக வசதிகளைக் கொண்டுள்ளது.
கடந்த 20 ஆம் திகதி நடைபெற்ற நிபுணர் குழு கூட்டத்தில் இந்த நோய்க்கான பதிலளிப்பு தொடர்பாக தேவையான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டதோடு, அது தொடர்பான அறிவுறுத்தல்கள் அடங்கிய சுற்றறிக்கை கடிதமும் அனைத்து சுகாதார நிறுவனங்களுக்கும் வழங்கப்பட்டதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
உலகளாவிய தயார்நிலை மற்றும் பதிலளிப்பதற்காக, 14 ஆம் திகதி, இந்த நோய் பரவல் காரணமாக உலக சுகாதார நிறுவனம் பொது சுகாதார அவசரநிலையை அறிவித்தது.