ஓய்வை அறிவித்தார் ஷிகர் தவான்!
சர்வதேச மற்றும் உள்நாட்டு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ஷிகர் தவான் அறிவித்துள்ளார்.
இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் ஷீகர் தவான் இந்திய அணிக்காக கடந்த 2010ஆம் ஆண்டு அறிமுகமாகி இறுதியாக கடந்த 2022ஆம் ஆண்டு பங்களாதேஷத்திற்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடியிருந்தார்.
இந்நிலையில், இன்றைய தினம் (24) சர்வதேச மற்றும் உள்ளூர் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் காணொளி வெளியிட்டுள்ள அவர் அதில், மறக்க முடியாத எண்ணிலடங்காத நினைவுகளுடன் விடைபெறுகிறேன்.
இத்தனை ஆண்டுகளாக பக்கபலமாக இருந்து அன்பும், ஆதரவும் கொடுத்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து குறித்த காணொளியை பதிவிட்டுள்ளார்.