வரலாற்று சிறப்புமிக்க பயணமாக உக்ரைன் சென்றடைந்தார் பிரதமர் மோடி
போர் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கும் உக்ரைன் நாட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை வந்தடைந்தார்.
உக்ரைன் நாட்டுத் தலைவரை சந்தித்து, நடந்து வரும் போரை அமைதியான முறையில் தீர்க்கும் முன்னெடுப்புகளை பிரதமர் மோடி பகிர்ந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உக்ரைன் நாட்டு அதிபர் விளாடிமிர் ஸெலன்ஸ்கியின் அழைப்பை ஏற்று, அந்நாட்டுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார் மோடி.
மாஸ்கோ சென்று ரஷிய அதிபர் விளாடிமிர் புதினைச் சந்தித்துப் பேசிவிட்டு வந்த ஆறு வார காலத்தில் இன்று உக்ரைனுக்குச் சென்று விளாடிமிர் ஸெலன்ஸ்கியைச் சந்திக்கிறார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி. ரஷிய அதிபருடனான சந்திப்பு, அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் கடுமையான விமர்சனத்தைப் பெற்றிருந்த நிலையில், இன்று உக்ரைன் பயணம் அமைந்துள்ளது.
1991ஆம் அண்டு உக்ரைன் சுதந்திரம் பெற்ற பிறகு, அந்நாட்டுக்கு பயணம் மேற்கொள்ளும் முதல் இந்திய பிரதமர், மோடி என்பது குறிப்பிடத்தக்கது.