மருதானையில் தடம்புரண்ட ரயில் – போக்குவரத்துக்கு பாதிப்பு.
காலியிலிருந்து மருதானை நோக்கி பயணித்த எரிபொருள் போக்குவரத்து ரயில் இன்று (25) அதிகாலை மருதானை ரயில் நிலையத்தில் தடம் புரண்டது.
இந்த ரயில் தடம் புரண்டதால் மருதானை ரயில் நிலையத்தின் மூன்றாவது மற்றும் நான்காவது நடைமேடைகள் சேதமடைந்துள்ளதாக ரயில்வே பிரதி பொது முகாமையாளர் என்.ஜே.இடிபோலகே தெரிவித்தார்.
மேலும், தடம் புரண்ட ரயிலை அகற்றும் வரை போக்குவரத்து நடவடிக்கைகள் தடைப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.