குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் விசேட அறிவிப்பு!
கடவுச்சீட்டுகள் வழங்குவதை மட்டுப்படுத்த வேண்டியிருப்பதால் அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரம் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்குமாறு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
2023 ஆம் ஆண்டு விநியோகிக்கப்பட்ட வெளிநாட்டு கடவுச்சீட்டுக்களில் 23 சதவீதமானவை மாத்திரமே பயன்படுத்தப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
எதிர்வரும் ஒக்டோபர் மாத இறுதியில் கையிருப்பு பெற்றுக்கொள்ளப்படும் எனவும் அந்த அறிவிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவசர காரணங்களுக்காக மாத்திரம் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக் கொள்ளப்படுவதாக அமைச்சின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.