பெண்கள் டி20 உலகக் கிண்ண அட்டவணை : இரண்டு மைதானங்களில் 23 போட்டிகள்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள மகளிர் இருபதுக்கு-20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, இந்த போட்டி அக்டோபர் மாதம் மூன்றாம் திகதி ஆரம்பமாகிறது.
அரையிறுதிப் போட்டிகள் 17 மற்றும் 18ஆம் திகதிகளிலும், இறுதிப் போட்டி அக்டோபர் 20ஆம் திகதியும் நடைபெறும்.
இந்த போட்டிகளுக்கான மேலதிக திகதியை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வழங்கியுள்ளது.
இந்த போட்டியில், ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய அணிகள் Group A கீழ் போட்டியிடும்.
Group B இல் தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, மேற்கிந்திய தீவுகள், பங்களாதேஷ் மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் இடம்பெற்றுள்ளன.
இந்தப் போட்டியில் 23 போட்டிகள் துபாய் மற்றும் ஸாஜா மைதானங்களில் நடைபெறும்.
செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 1 வரை 10 பயிற்சி ஆட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது.
இந்த போட்டியை பங்களாதேஷில் நடத்துவதற்கு முன்னர் திட்டமிடப்பட்டிருந்த போதிலும், அந்நாட்டில் நடந்து வரும் போராட்டங்கள் காரணமாக, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடத்துவதற்கு சபை அண்மையில் தீர்மானித்தது.