காசா மீது இஸ்ரேல் தீவிர தாக்குதல்!
காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் நேற்று மாத்திரம் சுமார் 20 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெய்ர் எல்-பலா மற்றும் கான் யூனிஸ் ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களின் போதே அவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
காசா மீதான இஸ்ரேலின் போர் நடவடிக்கையில் இதுவரை சுமார் 40,476 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 93,647 பேர் காயமடைந்துள்ளனர் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.