கடவுச்சீட்டு விவகாரம் தொடர்பில் அமைச்சரின் அறிவிப்பு!
கடவுச்சீட்டுகளை வழங்குவதில் ஏற்பட்டுள்ள நெருக்கடி எதிர்வரும் ஒக்டோபர் 16ஆம் திகதியுடன் முடிவுக்கு வரும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
இதன்படி, வெளிநாட்டு கடவுச்சீட்டு பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக தாம் வருத்தம் தெரிவிப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.
நாளாந்தம் வழங்கப்படும் வெளிநாட்டு கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கை ஆயிரத்துக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.