குழந்தைகளுக்கான சவர்க்காரங்களில் மோசடி!
குழந்தைகளின் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் குறைந்த TMF மதிப்பில் குழந்தைகளுக்கான சவர்க்காரங்களை தயாரித்து விற்பனை செய்யும் மோசடியில் பலர் ஈடுபட்டு வருவதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.
குழந்தைகளுக்கான சவர்க்காரங்களுக்கு SLS சான்றிதழைப் பெறுவது கட்டாயமில்லை என்பதால், சில நிறுவனங்கள் TMF மதிப்பில் குழந்தை சவர்க்காரங்களை தயாரித்து விற்பனை செய்யும் மோசடியில் ஈடுபட்டுள்ளன.