டெஸ்ட் அணியிலிருந்து நீக்கப்பட்டார் குசல் மெண்டிஸ்!
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தின் லோர்ட்ஸ் மைதானத்தில் இன்று (29) ஆரம்பமாகவுள்ளது.
இந்த டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கும் இலங்கை அணி தற்போது பெயரிடப்பட்டுள்ளது.
அதில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
அதன்படி குசல் மெண்டிஸ் மற்றும் விஷ்வா பெர்னாண்டோ ஆகியோர் அணியில் இடம்பிடிக்கவில்லை.
அவர்களுக்கு பதிலாக பெத்தும் நிஸ்ஸங்க மற்றும் லஹிரு குமார அணிக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை அணியில்,
திமுத் கருணாரத்ன, நிஷான் மதுஷ்க, பெத்தும் நிஸ்ஸங்க, அஞ்சலோ மெத்தியூஸ், தினேஷ் சந்திமால், தனஞ்சய டி சில்வா, கமிந்து மெண்டிஸ், பிரபாத் ஜயசூரிய, அசித பெர்னாண்டோ, லஹிரு குமார மற்றும் மிலன் ரத்நாயக்க
லோர்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் இதுவரை 8 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இலங்கை அணி, அதில் எதிலும் வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.