உக்ரைன் விமானப்படைத் தளபதி பதவி நீக்கம்!
உக்ரைனின் விலையுயர்ந்த புதிய எப் – 16 போர் விமானம் ஒன்று அழிக்கப்பட்டது தொடர்பான விவாதத்திற்கு மத்தியில் உக்ரைன் விமானப்படை தளபதியை ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி பதவி நீக்கம் செய்துள்ளார்.
லெப்டினன்ட் ஜெனரல் மைகோலா ஓலேஷ்சுக்கை பணிநீக்கம் செய்ததற்கான காரணத்தை ஜெலென்ஸ்கி குறிப்பிடவில்லை, ஆனால், அனைத்து வீரர்களையும் கவனித்துக் கொள்ளும் பொறுப்பு தனக்கு இருப்பதாக கூறினார்.
இதேவேளை, உக்ரைனின் விமானப்படையின் இடைக்கால தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் அனடோலி கிரிவோனோஷ்கோ நியமிக்கப்பட்டுள்ளார் என இராணுவத்தின் பொது ஊழியர்கள் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.